பரமக்குடி மே 31
பரமக்குடியில் உள்ள பொது கட்டிடங்கள், திருமண மண்டபங்கள், தனியார் மருத்துவமனைகளில் பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பரமக்குடியில் செயல்பட்டு திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள்,தனியார் மருத்துவம னைகளில் சுகாதாரமற்ற நிலை மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள தீ தடுப்பு உபகரணங்கள் உள்ளனவா?அதன் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை பரமக்குடி சார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். பின்பு, தீ விபத்து ஏற்படும் நேரங்களில் தீ தடுப்பு உபகரணங்கள் மூலம் தீ விபத்துக்களை தடுக்க 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டுமென சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் கட்டிட உரிமையாளருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது பரமக்குடி வட்டாட்சியர் அலுவலக மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.
பட விளக்கம் பரமக்குடியில் உள்ள தனியார் கட்டிடங்கள், தங்கும் விடுதிகள் தனியார் மருத்துவமனைகளில் சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் ஆய்வு மேற்கொண்டார்.