கோவை., மே. 24 :
நேபாளம் நாட்டில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி மே 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் வடவள்ளி சேர்ந்த வருண் தற்காப்பு கலை அகாடமி மாணவ, மாணவிகள் இந்திய தாய் திருநாட்டின் சார்பாக விளையாடி வெற்றி பெற்றனர், இன்று கோவை இரயில் நிலையம் வந்தடைந்த வெற்றி பெற்ற வீரர்களை அவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் மாலைகள், சால்வைகளை அணிவித்து வரவேற்றனர்.
இப்போட்டியின் பயிற்சியாளர் வருண் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, பூட்டான், பங்களதேஷ், நேபாளம் போன்ற பல நாடுகள் பங்கேற்றதாகவும்,
இதில் இந்தியா சார்பாக தமிழ் நாட்டை சேர்ந்த வீரர்களாக தாங்கள் போட்டியில் பங்கேற்றகாகவும்,அதில் தான் 3 தங்கம்,1 வெள்ளி பதக்கமும் வருண் தற்காப்பு கலை அகாடமி மாணவர்கள் தருண் 3 தங்கம்,1 வெள்ளி, அமிர்தா 1 தங்கம்,நேஷிதா 2 தங்கம்,லட்சுமிதா 1 தங்க பதக்கமும் பெற்றனர்.
சுருள்வாள், வேல்கம்பு, போன்ற 5 பிரிவுகளை கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளோம், கடந்த பல மாதங்களாக இதற்காகவே தினமும் கடுமையான தனிப்பயிற்சி எடுத்துக்கொண்டதற்கு பலனாக இந்த வெற்றிகிடைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக என் தந்தை இருந்துள்ளார். இந்த போட்டி சர்வதேச அளவில் சாதனை படைப்பதற்கு பெரும் உறுதுணையாக இருந்தது.
சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட நாங்கள் ஆர்வமுடன் உள்ளதாகவும், நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பொருளாதார ரீதியாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும், எனவே தமிழக முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் எங்களுக்கு உதவி செய்தால் மேலும் பல நாடுகளுக்கு சென்று போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என்று தெரிவித்தார்.