மதுரை பிப்ரவரி 10,
மதுரை காமராஜர் சாலையில் உள்ள செல்லம் சரஸ்வதி மகாலில் பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக பணி நியமனம் செய்த மாநில தலைவர் கே அண்ணாமலையாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரதீய ஜனதா கட்சியின் மதுரை மாநகர மாவட்ட தலைவராக சி எம் மாரி சக்கரவர்த்தி பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. விழாவில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம சீனிவாசன் பங்கேற்று புதிய மாவட்டத் தலைவரை கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக முன்னாள் மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன்,
தென்னிந்திய பார் வார்டு ப்ளாக் கட்சியின் தலைவர் திருமாறன்ஜி,
தேசிய பாஜக பொது குழு உறுப்பினர் மக்கள் சேவகி மகாலெட்சுமி, மண்டல தலைவர் சீனி செல்வகுமார், மண்டல பொதுச்செயலாளர் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி உதய சுந்தர் மற்றும் வழக்கறிஞர் ஐயப்ப ராஜா
உள்ளிட்ட பல முக்கிய பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.