நிலக்கோட்டை அக்.28
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் 15-வார்டு திமுக கவுன்சிலராக உள்ளவர் வேளாங்கன்னி செல்வராஜ், பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் இத்தம்பதியினர், தூய்மைப்பணிகளை. செய்பவர்களை போற்றும் வகையில் கவுன்சிலராக பொறுப்பேற்றபின். கடந்த மூன்று ஆண்டுகளாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவுப்படி, மாவட்டச் செயலாளர் ஐபி.செந்தில்குமாரின் வழிகாட்டுதழின்படி, ஒன்றியச் செயலாளர் மணிகண்டன்,
நகரச் செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை ஆகியோரது முன்னிலையில் வார்டில் குடிநீர்,தூய்மைப் பணி உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு புத்தாடைகள், மற்றும்
இனிப்புகள்,
பட்டாசுகள்,
ரொக்கம் ரூபாய் உட்பட தீபாவளி பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்,
இதனால் வருட முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.