சம்பள உயர்வு, நிலுவை தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்
சுமார் 70க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் துப்புரவு, சமையல் உதவியாளர், நோயாளி பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன
பல ஆண்டுகளாக சம்பள உயர்வின்றி பணிபுரிந்து வருவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் இதனால் சம்பளம் உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டி துப்புரவு பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்
இதன் ஒரு பகுதியாக அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என நீதிமன்ற வழக்கு தொடர்ந்தனர்
இதில் மூன்று மாதத்தில் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் நகலை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்கை சந்தித்து அவரிடம் கொடுத்து தங்களுக்கு சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.