கிருஷ்ணகிரி: நவம்பர்:10:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம் நடுபையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 -ம் வகுப்பு பயிலும் 132 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 இலட்சத்து 38 ஆயிரத்து 680 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் .மணிமேகலை நாகராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



