சென்னை, டிச-21,
சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள மெர்சி முதியோர் இல்லத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் நிர்வாகி அமலன் சாம்ராஜ் பிரபாகர் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி வி. ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இல்லத்தில் உள்ள முதியோர்களுடன் கேக் வெட்டியும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடினார் . மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட, பகுதி மற்றும் மகளிரணியினர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.