கோவை டிச:15
பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள டி.இ.எல்.சி பள்ளியில் எதிர்வரும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா மேரி தலைமை தாங்கினார்.
பள்ளி தாளாளர் ஜோசப் ஞானய்யா கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.இதைத் தொடர்ந்து நகர மன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.இதில் பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தேவகுமார்,
மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் .பெற்றோர்கள், ஆசிரியர்கள், திரளாக கலந்து கொண்டனர்.