மதுரை ஏப்ரல் 24
மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மதுரை மாநகரில் எதிர் வரும் 12.05.2025 (திங்கள்கிழமை)-அன்று அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளவிருப்பதால், அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஜுன் 2025 மாதத்தில் 14-ஆம் தேதி (14.06.2025-சனிக்கிழமை) விடுமுறை தினத்தை வேலை தினமாக ஈடு செய்யப்படும்.
எனவே 12.05.2025-அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், வங்கிகளும் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.