மதுரை நவம்பர் 15,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடைபயணம் விழிப்புணர்வு பேரணியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ..மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார்கள். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்