தேனி மார்ச் 3
அறிக்கை விடுவார்கள் ஆனால் இதன் மூலம் தமிழகத்திற்கு ஒரு திட்டத்தை கூட கொண்டு வர முடியாது
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என்றும் ஆளுங்கட்ச்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு என்றும் இரட்டை வேடம் போடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் தலையாய கடமை என்று பேசிய அவர் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து ரகசியம் இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறி வந்தார் ஆனால் அந்த ரகசியத்தை நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நீட் தேர்வில் ரத்து செய்ய முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துவிட்டார்.
இங்கே ஒருத்தர் இருக்கிறார் அவர் கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக ஒரு மூழ்கும் கப்பல் என்று ஓபிஎஸ்ஐ குறித்து பேச தொடங்கினார்.
பதவி கிடைக்காததால் தர்மயுத்தம் நடத்தினால் சட்டமன்றத்தில் நடந்த பெரும்பான்மை வாக்கெடுப்பில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தார் இவர் துரோகியா? நான் துரோகியா? தொண்டர்களின் சொத்தான அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்தவர் இவர் என்று பேசியவர்.
நீங்கள் கடந்த 2021ல் தான் எம்.எல்.ஏ நான் 1989 ஆம் ஆண்டு எம்எல்ஏ உங்களுக்கு வாய்ப்பு வந்ததால் நாங்கள் உங்கள் பின்வந்தோம், கிளைக் கழகச் செயலாளராக இருந்து அமைச்சர் அதன்பின் முதலமைச்சராக வந்தவன் நான் ஆனால் நீங்கள் யாரால் கட்சிக்குள் வந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று ஓபிஎஸ்ஐ விமர்சித்து பேசினார் .
2026 இல் அதிமுக இருக்காது என்று ஓபிஎஸ் கூறுகிறார் இதே இடத்தில் 2026 ஆம் ஆண்டு தேனி வருகிறேன் முதலமைச்சராகஅப்போதுதெரியும்
நான் மட்டும் பொதுச் செயலாளர் இல்லை தொண்டர்கள் அனைவரும் பொது செயலாளர் தான் இதை மு.க ஸ்டாலின் கூறுவாரா என பேசினார்.