அரியலூர்,ஜன;18
அரியலூர் – பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறையில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 108-வது பிறந்தநாள் விழாவையொட்டி அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகிய திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து.
பின்னர் ஊர்வலமாக வந்த அதிமுகவினர் செந்துறை உடையார்பாளையம் பிரிவு சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவருமான வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் குழுமூர் செல்வம், ஒன்றிய செயலாளர் உதயம்.ரமேஷ், பெரியாகுறிச்சி முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அழகுதுரை, இலைக்கடம்பூர் பழனிவேல், கொளஞ்சி.அருண், பேராசிரியர் காமராஜ், செந்துறை கிளைச் செயலாளர் எஸ்.ஆர்.பக்ருதின், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்