சென்னை, டிச. 04 –
அண்ணாநகர் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை கடுமையான பிரச்சினைகளால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள், குறைப்பிரசவ குழந்தைகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க சென்னை அண்ணா நகர் ரெயின்போ மருத்துவமனையில் ‘சுபிக்க்ஷா’ என்னும் புதிய மருத்துவ மையம் தொடக்கப்பட்டது.
இம்மையத்தை அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன் திறந்து வைத்தார். டாக்டர் சாந்தா மற்றும் டாக்டர் ஷோபனா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவர்கள் அனுராதா, சுனிதா, லோகபிரபு நந்தினி மற்றும் நிகிதா போஜ்ஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர். வி.கே. சாந்தா கூறுகையில், ” அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களை சரியான நேரத்தில் கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சுபிக்க்ஷா மூலம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு பிரச்சினைகள், ஆட்டோ இம்யூன் பிரச்சினைகள், முந்தைய கர்ப்ப பிரச்சினைகளைக் கொண்ட தாய்மார்களுக்கு முழுமையான பராமரிப்பை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.



