சென்னை, செப்டம்பர்- 02, பிரிட்டானியா தி லாஃபிங் கவ் சீஸ் “பிராண்ட், அனைத்து வயதை சேர்ந்த சீஸ் ஆர்வலர்களுக்குமான “சீஸ் இட் அப் டாட் இன்”மையத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரிட்டானியா பெல் ஃபுட்ஸ் செயல் அலுவலர் அபிஷேக் சின்ஹா அறிமுக நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது:-
பிரிட்டானியா தி லாஃபிங் கவ் சீஸ் வழங்கும் பல்வேறு வகையான சீஸ்களை நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவோடு ஒன்றிணைத்து, அதன் ருசியை மென்மேலும் அதிகரிக்கச் செய்து , எளிதாக மற்றும் நொறுக்குத் தீனியாக பயன் படுத்தப்படக்கூடிய உணவு வகைகளை வழங்குகிறது.
மைண்ட் ஷேர் மற்றும் டைம்ஸ் நெட்ஒர்க் உடனான கூட்டாண்மையின் மூலம் முறைப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் ஹப், சீஸ் ஆர்வலர்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரெஞ்சு சீஸ் தயாரிப்பாளரான பெல் ஃபுட்ஸ் நிறுவனங்கள் ஒன்றிணைத்து பெல் ஃபுட்ஸ் நிறுவனத்தை உருவாக்கி அதன் உடைமைப்பட்டியலில் பிரிட்டானியா தி லாஃபிங் கவ் சீஸ் என ஒரு இணை முத்திரை பிராண்ட் சீஸ் ஐ அறிமுகப்படுத்தியது.