நாகர்கோவில் நவ 12
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் மனநல காப்பகத்தில், மனநோயாளிகளை கட்டுமான பணிகளுக்கு நிர்பந்தித்து பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அச்சங்குளத்தில், தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கீழ் உள்ள நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணிகளுக்கு, மனநல காப்பகத்தில் இருந்து, மன நோயாளிகளை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பணியில் ஈடுபடுத்துவதாகவும், உடன்படாதவர்கள் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முடித்துள்ளனர்.