கரூர் மாவட்டம், மே – 23
குளித்தலை நீலமேகப் பெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தினை முன்னிட்டு தேரோட்டு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. கோவிந்தா கோவிந்தா என நாமும் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் அருள்மிகு, நீலமேகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில் வருடம் தூரம் வைகாசி விசாகப் பெருந்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த மே 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி விசாக பெருந் திருவிழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து சுவாமி உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் அன்னம், கருடன், யானை, ஹனுமான் மற்றும் பூத வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா கண்டார்.
அதனைத் தொடர்ந்து வைகாசி விசாகப் பெருந்திர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
முன்னதாக சுவாமி உற்சவர், அம்பாள்களுக்கு இளநீர் பன்னீர் தயிர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உற்சவர் அம்பால்களுடன் எழுந்தருளிய திரு தேரினை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற நாமம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
இதில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தார்.
வழி நெடுங்கிலும் பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.