சுசீந்திரம்.மே18
சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் தேர் பவனி
சுசீந்திரம் அருகே உள்ள வழக்கம்பாறை சகாயபுரத்தில் இடைவிடா சகாய அன்னை திருத்தலம் உள்ளது இந்த திருத்தலத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு வந்து வழிபட்டு செல்வது வழக்கம் புகழ்பெற்ற இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா வருடம்
தோறும் மே மாதம் 2 ம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் திருப்பலி தேர்பவனி கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெறும் அது போல இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 9ம்தேதி துவங்கியது இதனை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஜெபமாலையும் தொடர்ந்து கொடியேற்று விழா திருப்பலியும் நடைபெற்றது மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜான் ரூபஸ் கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் அருட்பணியாளர். சாம் மேத்யூ மறையுரை வழங்கினார் விழா நாட்களில் தினமும் ஜெபமாலை , நவநாள், திருப்பலி நற்கருணை ஆசீர் , ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றதுவிழாவில் 9 ஆவது நாளான நேற்று 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட மேதகு ஆயர் நசரேன் சூசை சிறப்பு மாலை ஆராதனைக்கு தலைமை தாங்கி மறையுறை வழங்கினார் இரவு 8 மணிக்கு சகாய அன்னையின் தேர் பவனி நடைபெற்றது விழாவின் நிறைவு நாளான இன்று 18 ஆம் தேதி காலை 6:30 மணிக்கு திருப்பலி காலை 8 மணிக்கு கன்னியாகுமரி வட்டார முதல்வர் அருட் பணி ஜான்சன் தலைமையில் திருவிழா திருப்பலியும் முதல் திரு விருந்தும் நடக்கிறது புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் அருட் பணி மரிய செல்வன் மறையுரை வழங்குகிறார் மாலை 6 மணிக்கு திருப்பலியும் திரு கொடி இறக்கமும் நடக்கிறது நிகழ்ச்சிக்கு இறச்சகுளம் இணைபங்கு தந்தை ஞானராய் தலைமை தாங்குகிறார் தென் தாமரைக் குளம் பங்குத்தந்தை சுரேஷ் மறையுரை வழங்குகிறார் இரவு 8 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட் இணை பங்குத்தந்தை புரூனோ போன்சோ பங்கு பேரவை துணைத்தலைவர் சகாய ராஜன் செயலாளர் சகாயராஜ் துணைச்செயலாளர் சபிலா ரோஸ் லின் ஷீபா பொருளாளர் சர்மிளா பானு மற்றும் பங்கு பேரவையினர் பங்கு மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



