தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி உத்தரவின் பெயரில், மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா மேற்பார்வையில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இணைந்து நடத்தும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 3.0 சார்பில் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட மேலாளர் கௌதம் சண்முகம் தலைமை தாங்கினார். அறிவியல் கண்டுபிடிப்புகளில் புலிக்கரை, இலக்கியம்பட்டி, பேகர அள்ளி, மல்லுப்பட்டி உட்பட 13 அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 80 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட கல்வி அலுவலகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலு, நடுவர்கள் டாக்டர் ஹேமா, டாக்டர் மாலதி, கபில்தேவ், வேலுச்சாமி, ஸ்டார்ட் அப் கம்பெனி ஹரிஹரசுதன், சவிதா, கோபிநாத், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



