மயிலாடுதுறை பிப்.8
மயிலாடுதுறையில் முன்னனி நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியீடு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பாலபிஷேகம் செய்தும் கொண்டாட்டம்.
மகிழ் திருமேனி இயக்குனர் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் காலை 9-மணி சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள விஜயா திரையரங்கில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியுள்ளது.
திரைப்படத்தை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் காவிரி துலாக்கட்டத்தில் இருந்து திரையரங்கத்திற்கு இருச்சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து திரையரங்கம் முன்பு வைத்துள்ள பேனர்களில் பாலபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும், கடவுளே அஜித் என்று உற்சாகமாக கோஷங்கள் எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தீபாவளி பொங்கல் பண்டிகை போல அஜித் படத்தை கொண்டாடுவதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து காலை முதலே நீண்ட வரிசையில் நின்று படம் பார்க்க திரையரங்கம் உள்ளே சென்றனர்.
திரையில் (ஸ்கிரீன்) விளம்பர வீடியோ வெளியிட அரசு அனுமதி மறுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவலை அளித்துள்ளதாகவும், எங்களுக்கு அரசியல் வேண்டாம் என்றும் அரசியல் ஆக்காதீர்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் அடுத்து வரும் அஜித்தின் படங்களிலாவது திரை விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.