ராமநாதபுரம் அக் 07-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த தொத்தன்மகான் வாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ஏர்வாடி தர்காக்கு எதிரே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு கஞ்சா போதையில் பெட்டிகடைக்கு வந்த இரு இளைஞர்களில் ஒருவரான காட்டுபள்ளியை சேர்ந்த இர்பான் என்ற இளைஞர் கையில் கத்தியுடன் கடையின் முன்னே வைத்திருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்.
இதனை தட்டி கேட்ட கடையின் உரிமையாளர் முருகேசனை கத்தியால் தாக்கி கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இர்பான் மீது ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் ஏர்வாடி தர்கா கேட் வாட்ச்மேனை தாக்கி அவரையும் அடித்துவிட்டு திரும்பி செல்லும் போது பெட்டிக்கடையை அடித்து கடைக்காரரை தாக்கியதாக கடைக்காரர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடைக்காரரை தாக்கிய இர்பான் பகலில் தண்ணீர் வண்டி ஓட்டுவதாகவும் இரவில் ஏர்வாடி தர்கா பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வரும் பிச்சைக்காரர்களை அடித்து அவர்களுடம் இருந்து பணம் பிடுங்கி மது மற்றும் கஞ்சா வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும், தொடர்ந்த இர்பான் கடைகாரர்கள் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக கஞ்சா போதையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொண்டு பிரச்சனை செய்து வந்தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கஞ்சா போதையில் இளைஞர் இர்பான் கடைக்காரர் முருகேசனை கத்தியால் தாக்கி கடையை சேதப்படுத்தியதை கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி கேமராவில் பதிவாகி அந்த வீடியோ வெளியாகி பெருமர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது