கோவை ஜூன்:7
தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில், கோவையை சேர்ந்த மாணவி வெண்கலம் வென்று சர்வதேச அளவி லான போட்டிக்கு தகுதி பெற்றார்.
கடந்த மாதம் 21 இல் இருந்து 27 வரை கிக்பாக்ஸிங் பெடரேஷன் ஆப் இந்தியா மகாராஷ் டிரா கிக்பாக்ஸிங் பெடரேஷன் சார் பில் தேசிய கிக்பாக் ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி புனேவில் உள்ள ஸ்ரீ சிவ் சத்ர பதி சிவாஜி விளையாட்டு அரங்கில் சில்ட்ரன்ஸ் மற்றும் கேடட் பிரிவுகளில் நடந்த இப்போட்டியில் அகில இந்திய அளவில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் பங்கேற்ற 108 மாணவர்களில் கோவையை சேர்ந்த மாணவி இடம் பிடித்திருந்தார்.
இதில் கோவை சான் அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் இல் பயிற்சி பெற்று வரும் மாணவி ரியா மெஸ்ஸி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியை தலைமை பயிற்சியாளர் பிராங்க்ளின் பென்னி மற்றும் பயிற்சியாளர்கள் அமிர்தராஜ் சூரிய பிரபு கோவை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்க செயலாளர் பிரேம்குமார் கோவை மாவட்ட பயிற்சியாளர் ஆண்ட்லி ஆகியோர் வாழ்த்தினர்.