இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூரில் அதிமுக பேரூர் கழகம் சார்பில் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். மலேசியா எஸ்.பாண்டியன் முன்னாள் எம்.எல்.ஏ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றியச் செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார். அனைவரையும் வரவேற்று பூத்கமிட்டி உறுபபிளர்களை மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பின்னர் மாவட்டச் செயலாளர் பூத்கமிட்டி உறுப்பினர்களுக்கு தேர்தல் நேரத்தில் எவ்வாறு பணிகளை மேற்கொள்வது என்று பல ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.