தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்திய 3-ஆவது புத்தகத் திருவிழா 23.03.2025 அன்று மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.பெரியசாமி அவர்களால், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டு, 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்றுஇனிதே நிறைவுற்றது.
இப்புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், உள்ளுர் கவிஞர்கள், எழுத்தாளர்களின் இலக்கிய அரங்கம், முக்கிய பிரமுகர்களின் சிறப்புரைகள், பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
இப்புத்தகத் திருவிழாவை பார்வையிட வருகை தந்த பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த 10 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.32.5 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உள்ளுர் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் பாராட்டுசான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது