தஞ்சாவூர் டிச.27
தஞ்சாவூர் உலக திருக்குறள் பேரவை, வானதி பதிப்பகம் சார்பில் மருத்துவ பேராசிரியர் ராஜா ரெங்கராஜ் எழுதிய திருக்குறள் எளிமை குரல் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
இந்த விழாவிற்கு மருத்துவக் கல்வி முன்னாள் இயக்குனர் அழ மினாட்சிசுந்தரம் தலைமை வகித்தார் .மருத்துவர் பேராசிரியர் ராஜா ரெங்கராஜ் எழுதிய திருக்குறள் எளிமை குரல் நூலை தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பதிவாளர் கு.வே. பாலசுப்பி ரமணியன் வெளியிட அதை உலக தமிழர் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தலைவர் கா.வெ.சே. மருது மோகன் பெற்றுக் கொண்டார்
தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் முரசொலி, உலக திருக்குறள் பேரவை தலைவர் செ.ப.அந்தோணிசாமி, சென்னை வானதி பதிப்பகம் டி ஆர் ராமநாதன் ஆகியோர் பேசினர் நூலாசிரியர் டாக்டர் ராஜா ரெங்கராஜ் ஏற்புரையாற்றினார்
முன்னதாக உலக திருக்குறள் பேரவை செயலர் பழ மாறவர்மன் அனைவரையும் வரவேற்றார் நிறைவாக தேசிய நெடுஞ்சாலை முன்னாள் கண்காணிப்பு பொறியாளர் ரெங்கராஜ் நன்றி கூறினார்.