திருவாரூர் ஜனவரி 6,
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் புத்தக கண்காட்சி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
இப்புத்தக கண்காட்சியில் மாநில ஒருங்கிணைப்பு குழுவுடன் கலந்து புத்தக கடைகள் அமைத்திடவும், திருவாரூர் புத்தக திருவிழாவிற்கென தனி அடையாளம் சின்னம் உருவாக்குவது குறித்தும், அனைத்து பதிப்பகத்தார்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிடுவது குறித்தும், புத்தக கண்காட்சி நடத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ப்ளக்ஸ் பேனர், சுவரொட்டி விளம்பரம், வாட்ஸ் ஆப்; முகநூல் உள்ளிட்டவைகளில் விளம்பரம் செய்வது குறித்தும், அனைத்து பள்ளிகளிலும் புத்தக வாசிப்புதிறனை மேம்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு மாணவரும் புத்தகம் வாங்குவதற்கான சேமிப்புத்திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் தங்க ஏற்பாடு செய்வது குறித்தும், புத்தகண்காட்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வழித்தடத்திலும், சிறப்பு பேருந்துகள் இயக்கிட அனைத்து பேருந்து கிளை மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் இசைப்பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு இசை நிகழ்ச்சிகளும், மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் புத்தக விழா நடக்கும் இடத்தில் பொது போக்குவரத்து, சட்ட ஒழுங்கு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் சீராக வந்து செல்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் குறித்தும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் அவசர கால உதவி மருத்துவ முகாம்களும், புத்தக கண்காட்சி விழாவில் இரண்டு வாகனங்களும், அதேபோன்று தீயணைப்புத்துறையின் சார்பில் இரண்டு வாகன வசதியுடன் 24 x7 மணி நேரமும் பணி அமர்த்திடவும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் புத்தக் கண்காட்சி விழா நடைபெறும் இடத்தில் பிளிச்சிங் பவுடர் தெளித்தல், தற்காலிக கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி செப்பணிடுதல் ஏற்படுத்திடுவது குறித்தும், பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் மின் பகிர்மானத்துறையின் சார்பில் புத்தக பதிப்பதாரல் அமைக்கப்படும் கடைகளின் தன்மை மற்றும் மின் இணைப்பு பரிமரிப்பு பணியினை ஆய்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், புத்தகக் கண்காட்சியில் தினந்தோறும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், நூல் விற்பனையகங்கள் ஒரு கருப்பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் அரங்கினை வடிவமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
எதிர்கால சந்ததிகளிலிருந்து புதிய ஆளுமைகளை உருவாக்கும் நாற்றாங்களாக புத்தக கண்காட்சி அமைவதற்கு அனைத்து துறை அலுவலர்களும் தன்முனைப்போடும், அர்ப்பணிப்போடும் புத்தக கண்காட்சி நடத்த சீரோடும், சிறப்போடும் மாநில அளவில் பாராட்டக்கூடிய அளவில் அமைவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா உள்ளிட்ட அனைத்துதுறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.