மானாமதுரை: பிப்:19
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா வேதியரேந்தல் குரூப் இம்மானேந்தல் நீர் பிடிப்பு பகுதியில் கிராவல்குவாரி அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
வேதியரேந்தல் குரூப் புல எண் 91/5-ல் 91/6-ல் அரசு ஏழை மக்களுக்கு தானமாக கொடுத்த புஞ்சை நிலத்தை நிலம் மேம்பாட்டிற்குப் போலியாக அனுமதி பெற்று கிராவல் மண்ணை சுமார் 10 அடியில் அள்ளி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்த இடம் இம்மனேந்தல் கண்மாய் நீர்பிடிப்பு பகுதி, நீர்வரத்து கால்வாய் பகுதியிலும் ஆடு, மாடு மெய்ச்சல் பகுதி உள்ளன. இதில்குவாரி அமைத்தால் வேதியரேந்தல் கிராம மக்களுக்கு சிம்மனேந்தல் கண்மாய் விவசாயிகளுக்கு சுமார் 300 ஏக்கர் நஞ்சை நிலங்கள் விவசாயம் செய்யா முடியாமல் போய்விடும் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களான வேதியரேந்தல், செங்கோட்டை, பள்ளமீட்டான், செங்கோட்டை காலனி ,தெற்கு சந்தனூர் குடியிருப்பு நெடுங்குளம், இளையநாயக்கன். மேற்படி 10 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் .இதனால் கிராமத்தை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே போலியாக பெற்ற அனுமதியை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.