திருவாரூர்
ஜனவரி 10,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கலக்குடி ரெட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா சாகுபடிப்பணியில் ஈடுபட்டு வந்தனர் மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நூலாறு பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக சம்பா நெற்பயிர்களில் தண்ணீர் சூழ்ந்து அழுகும் நிலை ஏற்பட்டு மேலும் தண்ணீரை வடிய வைத்து அதற்கான உரங்களை தெரிவித்து பயிர்களை காப்பாற்றி வந்து இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சாதாரணமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் முப்பதாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் கூடுதலாக 5000 முதல் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தற்போது அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த நிலையில் தற்போது தண்ணீர் இல்லாமல் நிலங்கள் வெடிப்பு ஏற்பட்டு கதிர் வந்த நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பாக அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன்னதாக உளுந்து தெளித்து வருவது வழக்கம் ஆனால் தற்போது மண்ணில் ஈரப்பதம் இல்லாததால் உளுந்து தெளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக நூலாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்