திருப்புவனம்:டிச:15
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆர். எச். ஆர். மற்றும் ராஜேஷ் பல் மருத்துவமனையில்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட திமுக மருத்துவரணி மற்றும் மானாமதுரை தொகுதி மருத்துவரணி திமுக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த விழாவில்
மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மருத்துவர்கள் குமரேசன் ஜெரோம் மணிகண்டன் அஜெய் ஸ்வேதா ஹரிபிரசாத் ராஜேஷ் காமாட்சி ஆகியோர் தலைமையில் நடைற்ற இந்த மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைச் செயலாளர் சேர்மன் சேங்கை மாறன் ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கை மாறன் பேரூர் செயலாளர் நாகூர் கனி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் பொற்கோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அப்போது பேசிய சேர்மன் சேங்கை மாறன் மற்றும் மருத்தவரணி அமைப்பாளர் குமரேசன் ஆகியோர் பேசும்போது தமிழக முதலமைச்சர் மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் பல எண்ணற்ற திட்டங்களில் மருத்துவத்துறையே அதிகம் செயல்படுத்தப்படுகிறது என பெருமிதம் தெரிவித்தனர்.
ஊராட்சிமன்ற தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.