தென் தாமரைகுளம்., மார். 2. தென்தாமரைகுளத்தில் 200 ஆண்டுகளை கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் அரசு தொடக்கப்பள்ளியின் இருநூற்றாண்டு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா நேவிஸ் தலைமை தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்கள் சார்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட
இருநூற்றாண்டு விழா நினைவு அலங்கார நுழைவு வாயிலை திறந்து வைத்து கல்வெட்டினையும் திறந்து வைத்தார்.
பின்னர் இரு நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. மலரை கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பெற்றுக் கொண்டார். விழாவில் முன்னாள் ஆசிரியர்களை ஜாண்சன் தங்கவேல் கவுரவித்து நினைவு பரிசு வழங்கினார். இந்திய கிரிக்கெட் வீரர் எல். பாலாஜி கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். முன்னாள்,விழாவில் முன்னாள், இந்நாள் மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜில்லி ஆல்வின் தொகுத்து வழங்கினார் . முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகல்யா தேவி நன்றி உரையாற்றினார்
நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழுவினர், முன்னாள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.