பரமக்குடி, மே.17 – பரமக்குடி தேவர் மாளிகையில் ஆர்.ஜே இசை மற்றும் நடன பள்ளி சார்பில் மாணவர்களுக்கு பரத நாட்டிய சலங்கை பூஜை விழா நடைபெற்றது. ஏ.பி.எஸ்.ஆர் மெட்ரிக் பள்ளி அனுப்பிரியா செல்வராஜ், வள்ளலார் மடம் நிர்வாகி சுபலட்சுமி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றிய துவக்கி வைத்தனர். வழக்கறிஞர் கோகிலா வரவேற்றார் . திலக் ஷனா, ஜமிலா ஆகியோர் வீணை இசைத்து நிகழ்ச்சியை தொடங்கினர் . சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை அரசு இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை கவிதா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் கலைமுருகன், விநாயகா குரூப் எம்.டி பாலமுருகன், ராமநாதபுரம் கலாலயா கலைக்கூடம் முத்துலட்சுமி, ஆர்.சி யாதவா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள், சக்கரவாளநல்லூர் இசைக்கலைஞர் விஜயராம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். ராமநாதபுரம் வழக்கறிஞர் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார். ஆர்.ஜே இசை & நடன பள்ளி நிறுவனர் ஜமிலா நன்றி கூறினார்.
பட விளக்கம்
பரமக்குடியில் பரத நாட்டிய சலங்கை பூஜை விழா நடைபெற்றது.