திருவாரூர் ஜனவரி 28
நாடு முழுவதும் 76 ஆவது குடியரசு தின விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட மாப்பிள்ளை குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 76 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மூவர்ண கொடி ஏற்றப்பட்டு 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கூட்டு உடற்பயிற்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் பயின்று வரும் ஏழாம் வகுப்பு மாணவி ரோசினி மண்பானையில் மீது ஏறி 10 நிமிடம் பரதநாட்டியம் நடனம் ஆடினார்.
மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர் ஆசிரியர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பெற்றோர் ஆசியா கழக தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்