கன்னியாகுமரி அக் 7
கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு புனித நீர் எடுத்து செல்ல யானையை அனுமதிக்க வேண்டும் என்று இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி ரவுண்டானாவில் 48 கிராமங்களை சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொள்ளும் போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ,
கன்னியாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவுக்கு புனித நீர் எடுத்து செல்ல பாரம்பர்ய முறைப்படி யானையை மீண்டும் பயன்படுத்திட 48 கிராமங்களின் தலைவர்கள் பக்த சங்க பொறுப்பாளர்களின் கோரிக்கையினை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .சேகர்பாபுவிடம் தொலைப்பேசி வாயிலாக தெரிவித்து மீண்டும் யானை வெளிமாவட்டத்திலிருந்து கொண்டு வரப்படும் என்று திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் உறுதியளித்தார்.
ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் இன்று நடக்கும் என்று போராட்ட குழு அறிவித்துள்ளது.