நீலகிரி. நவ.16
57வது தேசிய நூலக வார விழாவில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பட்டிமன்றம் நடைபெற்றது் வாழ்க்கையை மேம்படுத்துவது நூலகமா தொலைக்காட்சியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது நீலகிரி மாவட்ட குறிஞ்சி இலக்கிய மன்ற நிறுவனர் குறிஞ்சி ராமமூர்த்தி நடுவராக செயல்பட்டார். நூலகமே என்ற தலைப்பில் சத்திய சிவன், பீனா சுதாகரன், தாமரைச்செல்வன், ஆகியோரும் தொலைக்காட்சியே என்ற தலைப்பில் சதீஷ்குமார், நிர்மலா, தங்கேஸ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்வில் வாழ்க்கையை பண்படுத்துவது நூலகமே என்று நடுவர் தீர்ப்பளித்தார். நிகழ்வில் கோத்தகிரி பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் நூலக வாசகர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக சிறப்பு விருந்தினராக அரிமா சரவணகுமார், கோவை எம் எஸ் டைல்ஸ் பிராஸ் மேலாளர் முருகேஷ், வசந்தம் டிவி வசந்த் சதிஸ் , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.