கோவை நவ:28
கோவை மாவட்டம் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஏற்பாட்டின் பேரில் பேண்ட் வாத்திய குழு போட்டிகள் பி.ஆர்.எஸ். வளாகத்தில் நடைப்பெற்றது.
இதில் பதினொன்று பள்ளிகளின் பேண்டு குழுவினர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக வாசித்து மூன்றாம் பரிசு பெற்றனர்.
சிறப்பாக வாசித்த மாணவர்களுக்கு பரிசாக கோப்பைகளும், ரொக்க பரிசாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களுக்கும் ஏற்பாடு செய்த ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பள்ளியின் நிர்வாகம் சார்பாக பள்ளியின் முதல்வர் அருட்தந்தை ஆரோக்கிய ததேயூஸ் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.