திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியல் உள்ள
ஸ்ரீஅறக்கட்டளையின் சார்பாக யூனி லிங்க் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி ஸ்ரீ அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ அறக்கட்டளையின் நிறுவனர்கள் R. ராஜ்குமார், R. ஆனந்தி ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக யூனி லிங்க் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மண்டல அமைப்பாளர் K. அக்சய் ஹைகுவாட் கலந்து கொண்டு பேசியதாவது, சியான் ஹெல்த் கேர் 19 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் 130 உற்பத்தி பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதனுடைய கிளையாக யூனி லிங்க் ஆர்கானிக் என்ற பெயரில் ஹெல்த் கேர், அக்ரி கல்ச்சர், வெட்னரி கல்ச்சர், ப்ரொபஷனல் கேர், பியூட்டி கேர், ஹோம் கேர், வீட்டு உபயோக மசாலா பொருட்கள் ஆகியவை இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் உள்ள ஸ்ரீ அறக்கட்டளை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும் சர்க்கரை நோய் ,மூட்டு வலி, ரத்த சோகை , கிட்னி, இருதயம் ஆகியவை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தேவையான மாத்திரை, கேப்சூல், டானிக் ஆகியவை உள்ளது என தெரிவித்தார். யூனி லிங்க் நிறுவனத்தின் மேலாளர் A.சீத்தாராமன், DR. தனசேகரன், G.வெங்கடேஸ்வரன் PRO, அன்பரசு, பாண்டிதுரை, பொறியாளர் அறிவழகன் மற்றும் திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.