தமிழக அரசு மயோனைஸ் உணவை ஒரு ஆண்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. ஈரோடு மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் இணைந்து நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில்
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், கேட்டரிங் உரிமையாளர்கள் மற்றும் அசைவ உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் .
இந்த கூட்டத்தில் ஈரோடு
மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது
தடை விதிக்கப்பட்டுள்ள கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைசுக்கு தடை விதிக்கப்பட்டு
உள்ளதால் அதை நுகர்வோர், வணிகர்கள் தவிர்க்க வேண்டும்.
கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைசிலும் சேர்ந்துவிடும்
என்பதால் அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிப்பது தயாரித்தவற்றை இருப்பு வைப்பது போக்குவரத்து செய்வது விநியோகம் மற்றும் விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்கு தடை செய்துள்ளது. எனவே உணவு
வணிகர்கள், கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைசை தயாரிக்கவோ, அவ்வாறு தயாரித்த
மையோனைசை இருப்பு வைக்கவோ, போக்குவரத்து செய்யவோ,
விநியோகம் அல்லது விற்பனை செய்யவோ கூடாது. அரசு உத்தரவை மீறி தயாரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் கண்டறியப் பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் உணவு
பாதுகாப்புத் துறையினரின் கள ஆய்வின் போது இது கண்ட றியப்பட்டால், உரிய விசாரணைக்குப் பிறகு உணவு பாது காப்பு உரிமம் இடைநீக்கம் உள்ளிட்ட சட்டப்பூர்வ
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும். உடல் நலனை பேணி காக்க ஏதுவாக, நுகர்வோரும் இதனை தவிர்க்க வேண்டும்.
எனினும் மையோனைஸ் பிரியர்களுக்கு மாற்றுத் தேர்வாக கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப் பட்ட முட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் சந்தையில் தொடர்ந்து கிடைக்கும். அவற்றை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ வணிகர்களுக்குத் தடை ஏதுமில்லை. அவை நுகர்வோரின் உடல்நிலைக்கு ஏற்றவாறு சரிவிகித உணவின் அளவிற்குள் சாப்பிடலாம்.
இவ்வாறு கூறினார் .
ஈரோட்டில் மயோனைஸ் தடைகுறித்து விழிப்புணர்வு கூட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics