தூத்துக்குடி மாவட்டம் அம்மன் புரத்தில் திருச்செந்தூர் நீதிமன்ற சட்டப் பணிக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பெண்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் மேலும் பெண்களுக்கான சட்ட திட்டங்களை பற்றிய விழிப்புணர்வு கள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு வழக்கறிஞர் பிரகாஷ் கலந்து கொண்டு கிராம மக்களுக்கிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார் நிகழ்ச்சி நிறைவில் சட்ட விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.



