வேலூர் மாவட்டம், ஊசூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 22ஆம் ஆண்டு ஆடி முதல் வெள்ளிக்கிழமை கூழ்வார்க்கும் திருவிழாவில் கலச ஸ்தாபனம், அவபிருதயாகம், சப்த கன்னிகள், ஸ்ரீ வாராகி அம்மனுக்கு பால்குட அபிஷேகமும் ,ரேணுகாம்பாள் விரத அருள் அலகு நிறுத்துதலுடன், தீபாராதனையும் ,அம்மனுக்கு கூழ் வார்த்தலும், ஊரணி பொங்கல் வைத்தல், ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலய வலம் வருதல் ,தீமிதி திருவிழாவும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் ஆலய ஸ்தாபகர் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிகள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஊசூர் ஊராட்சி மன்ற முன்னாள் உபதலைவர் எம் .ஆர் .ஜி .இரத்தினம் மற்றும் விழா குழுவினர்கள் , ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.



