சுசீந்திரம் நவ 12
கன்னியாகுமரி புது கிராமம் டி சி நகரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மின்வாரியத்தில் இருந்து கணக்கெடுப்புக்காக (ரீடிங் )வந்திருப்பதாக கூறி உள்ளே சென்ற வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதில் பாட்டி கூச்சலிடவே அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி இளைஞர்கள் திரண்டு வந்து அந்த இளைஞரை நையபுடைத்தனர். இதில் இருவரும் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.