ஈரோடு ஜன 18
ஈரோடு நக்கீரர் வீதியில் சித்தி விநாயகர் பாலமுருகன் புது எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலில் ஆண்டு தோறும் வருடா அபிஷேகம் நடப்பது வழக்கம்.
இது போல இந்த ஆண்டும் வருடாபிசேகம் நிகழ்ச்சி நடந்தது. மகம் நட்சத்திரத்தில் 108 சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நக்கீரர் வீதி கார்மேகம் வீதி பாரி வீதி ஓரி வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகியும் ஈரோடு மாநகர நகைக்கடை சங்க துணை செயலாளருமான ராஜா என்ற ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.