தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த அம்மன் திருக்கோயில்
ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் வேண்டுதலாக பூ மிதித் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்
மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு
பூக்குழி திருவிழாவை கண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.