காஞ்சிபுரம் ஏப்ரல் 18
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் உள்ள கருணாகரச்சேரி ஆரம்பப்பள்ளியில் ஆண்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் திருப்பெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்காடு ஏரி நீர் பாசன சங்கத் தலைவர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து
வெங்காடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி இரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு நடைபெற்ற இந்த விழாவில் பேச்சு போட்டி நடனப்போட்டி உட்பட பல்வேறு வகையான போட்டிகளிலும் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி வெங்காடு முன்னாள் தலைவர் வெங்காடு உலகநாதன் கௌரவிப்பு செய்தார்.