அக். 6
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் அண்ணமார் காலனி கோவில் மரமாத்து பணிக்காக பூமி பூஜை நடந்தது. இதனை செல்வராஜ் எம்எல்ஏ தொடக்கி வைத்தார். மேலும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் பலர்
அப்போது தங்களது பகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகளை முன் வைத்தனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக எம்எல்ஏ தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார் மற்றும் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு நாகராசன் மற்றும் அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி பகுதி செயலாளர் மியாமி ஐயப்பன் தம்பி குமாரசாமி மற்றும் ஆதவன் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.