கோவை டிச:19
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் வழங்கிய பொன்னினங்கள் 28.906 கிராம் தங்கம் உருக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஸ்டேட் வங்கி இடம் ஒப்படைத்தார்.
கோயமுத்தூர் மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இக் கோவிலில் பக்தர்கள் வழங்கிய தங்க காணிக்கைகள் பயன்பாட்டில் இல்லாதவை பிரித்தெடுக்கப்பட்ட 28 கிலோ 906 கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் இன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பாரத் பாரத ஸ்டேட் வங்கி மூலம் மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்கம் உருக்காலைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றம் நீதிபதி துரைசாமி ராஜு ஆகியோர் முன்னிலையில் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதில் மாசாணி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் மற்றும் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா கோவில் அறங்காவலர்கள் மஞ்சுளா, திருமுருகன்,மருதமுத்து ஆனைமலை பேருராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாசாணியம்மன் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு பூரண கும்பம் மரியாதை வழங்கப்பட்டு அமைச்சர் சாமி தரிசனம் செய்தார் பின் கோவில் வளாகத்தில் நடக்கும் கட்டுமான பணிகள் குறித்த ஆய்வு செய்தும் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பேட்டரி கார் போன்றவற்றை பார்வையிட்டார்.பாதுகாப்பு ஏற்பாடுகளை வால்பாறை உட்கோட்ட டிஎஸ்பி ஸ்ரீநிதி தலைமையில் சர்க்கிள் தாமோதரன் சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்