தென் தாமரைக்குளம் பிப் 27
அகஸ்தீஸ்வரம் அடுத்த கவற்குளம் தேரிவிளையில் திறந்தவெளி கலையரங்கம் அமைக்க அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை விடுத்தார்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திறந்த வெளி கலையரங்கம் அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதற்காக அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ் தலைமை வகித்தார்.
ஒன்றிய பொருளாளர் தங்கவேல், அகஸ்தீஸ்வரம் பேரூர் அதிமுக செயலாளர் சிவபாலன்,ஊர் தலைவர் தங்கராஜா, கவுன்சிலர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம் ஆனந்த், செல்வராஜ், விஜயன், குறமகள், அதிமுக நிர்வாகிகள் கிருஷ்ணன்,கலைவளன், குமாரவேல் உட்பட ஊர் மக்கள் பலர் பங்கேற்றனர்.