சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி சங்கரன்கோவில் பகுதியில் புளியங்குடி செல்லும் சாலை யில் மாவட்ட இளைஞரணி சார்பில் அமையவிருக்கும் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகளை மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு செய்தார் கலைஞர் நூலகம் பணிகள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது இந்த நூலகத்தில் 2000 புத்தகங்களுக்கு மேல் வைக்கப்பட்டு தமிழக அரசின் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் நூலகத்தில் இடம்பெறுகிறது மேலும் குளிர்சாதன வசதியுடன் நூலகம் விரைவில் மாணவ மாணவியர்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது மாவட்டச் செயலாளர் எம் எல் ஏ ராஜா ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார் உடன் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் வார்டு கவுன்சிலர்கள் தங்கவேல் காளி சாமி பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



