அரியலூர், ஜூலை:21
அரியலூர் மாவட்டம்,&வட்டம் காவனூர் ஊராட்சிக்கு உட்பட்டதாகும் கா. அம்பாபூர் கிராமம். அக்கிராமத்தில் காலனி தெருவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி மிகுந்த இருளாக காணப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் இப்பகுதி இருளாக இருப்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல ரொம்ப அச்சம் படுகிறார்கள்..
இது குறித்து காவனூர் ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், இதுநாள்வரை நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை… ஆகாவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக காலனி தெருவில் எரியாத மின் விளக்கை சீரமைத்து பொதுமக்களை வெளிச்சத்தில் வாழவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தீர்வு இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்