வேலூர்_07
வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு வட்டம், ஊசூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆனி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு யாகங்களும், வேள்விகளும், அபிஷேகமும் , ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக ஊசூர் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலய ஸ்தாபகர் கோவிந்தராஜ சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.