தருமபுரி அரசு கலைக்கல்லூரி எதிரே குளோபல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையும் பெங்களூருவில் உள்ள அப்பலோ மருத்துவமனையும் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் அப்பலோ மருத்துவமனையில் அனைத்து விதமான சூப்பர்ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகளும் இங்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் பெங்களூரு அப்பலோ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் டாக்டர் கௌதம் ராமன் பேட்டியில் கூறியதாவது: தருமபுரியில் குளோபல் மருத்துவமனை சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது. சில நோய்களுக்கு உயர் சிசிச்சை பெற நோயாளிகள் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்லும் போது நேரம் அதிகமாக செலவிட வேண்டியுள்ளது. நோயாளியின்தொடர் சிகிச்சைக்கும் அதிக நேரமும், பொருட்செலவும் ஆகிறது. இதை குறைக்கும் வகையில் பெங்களுரு அப்பலோ மருத்துவமனையும், தருமபுரி குளோபல் மருத்துவமனையும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் அடிப்படையில் அனைத்து விதமான நோய்களுக்கும் கண்டறியும் முதற்கட்ட சிகிச்சை தருமபுரி குளோல் மருத்துவமனையிலும் அதை தொடர்ந்து தேவையான உயர் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான உயர் சிகிச்சைகள் மருத்துவ வல்லுனர்கள் மூலம் உடனடி அப்பாய்ன்மென்ட் மூலம் கால விரையம் இன்றி உள் நோயாளியாக பெங்களூரு அப்பலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இதை தொடர்ந்து தேவையான தொடர் சிகிச்சைகள் தருமபுரியில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அப்பலோ மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கிசிச்சை அளிப்பர். இதனால் நோயாளிகளுக்கு நேரமும், பணமும் குறையும். இவ்வாறு கூறினார்.
பேட்டியின்போது தருமபுரி குளோபல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமநாதன், நிர்வாக அலுவலர் குணசுந்தரி, மேலாளர் சண்முகம் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.