அரியலூர்,டிச;10
அரியலூர் மாவட்ட வன அலுவலர்,அவர்களுக்கு,
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் பச்சை மனிதன் தங்க சண்முக சுந்தரம்
தனது கோரிக்கை மனுவில் தெரிவித்ததாவது;-
மாநிலத்திலேயே தலை சிறந்த முன்னோடி வனக்கோட்டமாக அரியலூர் மாவட்டத்தைமாற்றிட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள்.
மயில் குரங்குகள் காட்டுப்பன்றி மான்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்தும் வனவிலங்குகளிலிருந்து கட்டுப்படுத்த சிறுதானியங்களை வனங்களில் வளர்க்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை வைத்து பேசினார்.
வனங்களில் மரங்கள் வளர்ந்த பிறகு அதிலிருந்து உதிர்கின்ற இலை தழைகள் மக்கி மண்ணிலே மரத்தின் அடியிலே நீரை உறிஞ்சி வைத்துக் கொள்வதோடு மண் மலடாகாமல் மண்புழு உள்ளிட்ட பல்வகை நன்மை செய்யும் பூச்சிகளால் மண்ணானது பொல பொலப்பாக மாற்றப்படுகிறது இதனால் நீர் நிலைகள் குளங்களில் ஏரிகளில் தேங்கும் சேமிக்கப்படும் நீரினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதனை விட வனங்களில் தேங்கி உள்ள சருகுகள் மக்குகள் இவற்றின் மூலமே பெரும்பகுதி நிலத்தடி நீர் சேமிக்க முடிந்தது. இதனால் மண்ணில் போதிய சத்துக்கள் நிலைத்து நின்று கோடை காலங்களில் மழை பொழிவதனையும் மண்ணில் ஈர்த்து வைத்துக்கொண்டு செடிகள் கொடிகள் தாவரங்கள் மரங்களோடு வளர உதவின. தற்போதைய சூழலில் மண்ணுக்கான மரங்கள் தாவரங்கள் பயிரிடப்படாமலும் வனங்களில் மான்கள் உள்ளிட்ட தாவர உண்ணிகளுக்கு தேவையான தாவரங்கள் வனங்களில் அருகி போய்விட்டதால் வனத்தை விட்டு வெளியே வரும் போது மான்கள் உயிரிழப்பது சர்வசாதாரணமாகி வருகிறது. எனவே வனங்களில் காடுகள் வளர்ப்பது மரங்கள் வளர்ப்பதனை தாண்டி தாவரங்களை வளர்க்கவும் நடவடிக்கைகள் வேண்டும். சிறுதானியங்களை வனங்களில் குறிப்பாக ராகி சாமை தினை தெளிப்பு நெல் ரகங்கள் கம்பு கேழ்வரகு சோளம் உள்ளிட்ட பாரம்பரிய ரகங்களை ஆண்டுதோறும் வளர்ப்பது மூலம் மயில் குரங்குகள் காட்டுப்பன்றி மான்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்தும் வனவிலங்குகளிலிருந்து கட்டுப்படுத்த முடியும். மேலும் வனங்களில் கம்பி வேலிகளுக்கு பதிலாக உயிர்வேலி எனப்படும் இட்டேரி காடுகளை வளர்க்கவும் மீட்டெடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இட்டேரி காடுகள் வேலியினை மீட்பதன் மூலம் மயில் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வர இயலும். இதன் மூலம் வனங்களில் பாம்புகள் மயிலின் முட்டைகளை சாப்பிட இயலும் படிப்படியாக தேசியப் பறவையான மயிலினம் கட்டுக்குள் கொண்டு வர இயலும். மேலும் இட்டேரி காடுகள் வளர்ப்பதன் மூலம் குருவிகள் பல பறவைகள் கூடு கட்டி வாழும் முயல் உள்ளிட்ட பல உயிரினங்கள் வாழும் எனவே வனங்களில் இட்டேரி காடுகள் சிறுதானியங்கள் தாவரங்கள் விதைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தமிழகத்திலேயே சிறுதானியங்கள் அதிகளவில் விளைந்த மண்ணை மான்களும் காட்டுப்பன்றிகளும் மயிலும் குரங்கும் வேட்டையாடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்குவதற்கு ஆக்கப்பூர்வமான முற்றுப்புள்ளி வைக்க இயலும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை வைத்தார். இது குறித்து மேலும் கூறுகையில்
வெட்டி முடிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை நெய்வேலியில் காடுகளாக மாற்றிட நடவடிக்கைகள் எடுத்தது போல நடவடிக்கைகள் எடுத்து அரியலூரின் வனத்தில் மண்ணுக்கேற்ற மரமான கொடுக்காப்புளி கொடம்புளி நாவல் அத்தி இலந்தை உள்ளிட்ட பழ வகை மரங்களையும் நட்டு பராமரிக்க போதிய நிதிகளை கனிம வள நிதிகளில் இருந்து பெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு இடங்களில் உள்ள தைல மரங்களை அகற்றிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பறவைகள் வன விலங்குகள் குரங்குகள் உள்ளிட்டவைகளுக்கு பயன் தரும்
புதிய நீர்நிலைகளை வனத்துறை உருவாக்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
மயில் குரங்குகள் காட்டுப்பன்றி மான்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்தும் வனவிலங்குகளிலிருந்து கட்டுப்படுத்த சிறுதானியங்களை வனங்களில் வளர்க்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்